முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

172

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் நீடிப்பதாக மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நெடுவாசல் போராட்டக்காரர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறினார். ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விசாரணை ஆணையம் அமைக்கவில்லை என்று கூறினார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்த அவர், சி.சி.டி.வி. கேமராக்கள் அகற்றப்பட்டது குறித்து அப்பல்லோ மருத்துவமனை விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறினார்.