ஆட்சியில் நீடிப்பதற்காக அதிமுகவினர் மத்திய அரசுக்கு பல்லாக்கு தூக்குகிறார்கள் – முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறான் சாடல்..!

273

ஆட்சியில் நீடிப்பதற்காக அதிமுகவினர் மத்திய அரசுக்கு பல்லாக்கு தூக்குகிறார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறான் குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை எழும்பூரில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசிய அவர், உலகத்திலேயே தாய் மொழிக்காக உயிர்விட்டவர்கள் தமிழர்கள் தான் என தெரிவித்தார். பாஜகவினர் இந்துத்துவா என்ற ஆயுதத்தை எடுக்கிறார் என குறிப்பிட்ட தயாநிதிமாறன், ஆட்சியில் நீடிப்பதற்காக அதிமுகவினர் மத்திய அரசுக்கு பல்லாக்கு தூக்குகிறார்கள் என குற்றம் சாட்டினார்.