மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி | 58 பேர் கைது

176

மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற பெயரில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடியில் ஈடுபட்ட 58 பேர் கொண்ட கும்பலை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர்.

வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய ஹாங்காங்கை சேர்ந்த விஜய் ஈஸ்வர் என்பவர் தனது நண்பர்களுடன் மலேசியா, மற்றும் சீனாவில் பதிவு செய்து தனது வியாபாரத்தை வெளிநாட்டில் நடத்தினார்.2001ம் ஆண்டில் கோல்ட் கியூஸ்ட் என்ற நிறுவனத்தைத் தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது க்யூ நெக்ஸ்ட் என்ற பெயரில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் என்ற நிறுவனம் மூலம் விட்டமன் பவுடர்கள், ஹாலிடே பேக்கேஜ், நகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்தார்.

இதனை பதிவு செய்வதற்கு பத்தாயிரம் முதல் 50 ஆயிரம் வரை முதலீடுகளைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.இதுவரை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்ட நிலையில் பல வேலையில்லாத இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை, பெங்களூர், ஹைதராபாத் , மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 14 வழக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஹைதராபாத் போலீசார் 58 பேரை கைது செய்துள்ளனர். சுமார் இரண்டுகோடியே எழுபது லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 58 பேரின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.