நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான விவகாரம் உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவை செயலாளர் பதில் மனு தாக்கல்

227

எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு சட்டப்பேரவையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறு சட்டப்பேரவை செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், பேரவையை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த சட்டப்பேரவை விதிகளில் இடமில்லை என்றும் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.