மனுஷ்யபுத்திரனின் செயலால் பெண்களுக்கு மன உளைச்சல்..!

592

ஒட்டுமொத்த பெண்களையும் இந்து பெண் கடவுள்களையும் களங்கப்படுத்தும் வகையில் கவிதை எழுதிய கவிஞர் மனுஷ்யபுத்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் கலைச்செல்வி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், கவிஞர் மனுஷ்யபுத்திரன் பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் விதமாக கவிதை எழுதி முகநூலில் பதிவிட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும் மனுஷ்யபுத்திரனின் செயல் பெண்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.