மாயமான ஏ.என். 32 விமானம் தொடர்பாக இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

208

மாயமான ஏ.என். 32 விமானம் தொடர்பாக இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை அருகே கடந்த மாதம் 22-ஆம் தேதி 29 பேருடன் மாயமான ஏ.என்-32 ரக ராணுவ விமானத்தை தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட சாகர் நிதி, சமுத்ரா ரத்னாகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். வான்வழியாக ஆயிரம் மணி நேரத்திற்கு மேல் தேடும் பணி நடைபெற்று வருவதாக மனோகர் பாரிக்கர் கூறினார். எனினும், விமானத்தை தேடும் பணியில் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறிய அமைச்சர் மனோகர் பாரிக்கர், விமானத்தில் பயணம் செய்தவர்கள் குடும்பத்துடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் கூறினார்.