மது அருந்தினால் 2500 ரூபாய் அபராதம் – கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர்

149

பொது இடங்களில் மது அருந்தினால், இரண்டாயிரத்து 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கோவா மாநிலம் பானாஜியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் யாராவது மது குடிப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கு 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவித்தார். இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கூறிய முதலமைச்சர் மனோகர் பாரிக்கர், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.