குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்..!

216

திருச்சி அருகே குடிநீர் கேட்டு, 100 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி மாவட்டம் சமயபுரத்தை அடுத்த வெங்கங்குடி ஊராட்சியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் விநியோகம் மற்றும் மின்சாரம் இல்லாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் 100க்கும் மேற்பட்டோர் திடீரென காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலிறிந்த சம்பவ இடத்திற்கு வந்த மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாச்சியர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். குடிநீர் மற்றும் மின் விநியோகம் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.