மஞ்சமேடு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு செல்பி எடுக்க முயன்ற இளைஞர் தவறி விழுந்ததால் பரபரப்பு!

595

மஞ்சமேடு தென்பெண்ணை ஆற்று பகுதியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தவறி உள்ளே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் நந்தி துர்க்கத்தில் உற்பத்தியாகும் தென் பெண்ணையாறு கெலவரப்பள்ளி வழியாக கிருஷ்ணகிரி அணையை வந்தடைகிறது. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் போச்சம்பள்ளி வழியாக வரும் மஞ்சமேடு தென் பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் செல்பி எடுக்க முயன்ற இளைஞர் ஒருவர் தவறுதலாக தண்ணீரில் விழுந்த சிக்கினர். இதனை பார்த்த மற்றவர்கள், அவரை கயிறு மூலம் உடனடியாக மீட்டனர்.