மணிமுத்தாறு அணையில் இருந்து 8ம் தேதி முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்த நீர் திறந்து விட வேளாண்குடி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வரும் 8 முதல் செப்டம்பர் 20 வரை 105 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அணையில் 554 மில்லியன் கன அடிக்கு மிகாமல், நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். தண்ணீர் திறப்பால் 2 ஆயிரத்து 756 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் பழனிசாமி, நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.