mango thiruvizha

காரைக்காலில் நடைபெற்ற மாங்கனி திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.

63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாரின் பெருமையை பறைசாற்றும் விதமாக, காரைக்காலில் இன்று மாங்கனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதனைமுன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் மற்றும் பிச்சாண்டவர் மூர்த்திக்கு மகா அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றன. பின்னர் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில், பவளக்கால் விமானத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மாங்கனிகளை வாரி இறைத்து, தங்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.