500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்..!

354

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் குபேர் அங்காடியில், மாம்பழங்களை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, உணவு பாதுகாப்பு அதிகாரி தன்ராஜ் தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரசாயன வேதி பொருள் மூலம், பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோன்ற பழங்களை உட்கொண்டால், தோல் வியாதிகள் மற்றும் கல்லீரல் பாதிக்கப்படும் என்று கூறிய அதிகாரிகள், ராசாயனம் மூலம் பழங்களை பழுக்க வைக்கும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.