இமாச்சலப் பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு..!

285

இமாச்சலப் பிரதேசத்தில், மண்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில், நெர் சவுக் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் திடீர் தீபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து மூன்று தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். கேஸ் சிலிண்டர் வெடிப்பால் தீவிபத்து ஏற்படுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், குடியிருப்பில் சிக்கிக் கொண்டுள்ள மேலும் பலரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.