மண்டபம் அருகே 350 கிலோ கடல் அட்டைகளைக் கடலோரக் காவல் பிரிவு போலீஸார் பறிமுதல்..!

258

மண்டபம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ கடல் அட்டைகளைக் கடலோரக் காவல் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்குக் கடற்கரைப் பகுதியில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடலோரக் காவல் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஜோதிபாசு தலைமையில் அப்பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின் போது முஸ்தபா என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 350 கிலோ கடல் அட்டை பிடிபட்டது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸார் இது தொடர்பாக தப்பி ஓடிய 3 பேரை தேடி வருகின்றனர். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட 3 லட்ச ரூபாய் மதிப்புடைய கடல் அட்டைகளை மண்டபம் வன உயிரினப் பாதுகாப்பு அலுவலர்களிடம் போலீஸார் ஒப்படைத்துள்ளனர்.