இந்துகளுக்கு விரோதமாக செயல்படும் கமலஹாசனை நடமாட விடமாட்டோம் -மன்னார்குடி ஜீயர்

84

இந்துகளுக்கு விரோதமாக செயல்படும் கமலஹாசனை நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஐ.எஸ் அமைப்புடன் கூட்டணி வைத்து கொண்டு அவர்களிடம் லஞ்சம் வாங்கி கொண்டு, கமலஹாசன் ஹிந்துக்களுக்கு விரோதமாக கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டினார். சினிமாவில் காட்டும் நடிப்பை இந்துக்களிடம் காட்டும் கமல்ஹாசனை எங்கும் நடமாட விடமாட்டோம் என்றும் ஜீயர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், பெரும்பாலான கோவில்களில் கலாசாரம் தெரியாதவர்களை கோவில் நிர்வாக அதிகாரிகளாக நியமனம் செய்வதை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.