மணப்பாறை அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

183

மணப்பாறை அருகே கட்டிட தொழிலாளி வீட்டில் 12 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள சாமியார் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கட்டிட தொழிலாளியான இவரது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே சென்று, 12 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது பற்றிய புகாரின் பேரில் வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.