விறு விறுப்புடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

155

மணப்பாறை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600 காளைகள் வாடிவாசல் வழியாக ஒன்றன் பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன.

திருச்சி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை மாவட்ட காவல் கண்கணிப்பாளர் ஜியாவுல் ஹக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டில் 600 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க, காளையர்கள் ஆர்வமுடன் களமிறங்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கு தங்ககாசு, கட்டில், பீரோ, சைக்கிள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல், அடங்க மறுத்த காளைகளின் உரிமையாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.