மணப்பாறை அருகே விபத்தில் பலியான இளைஞரின் கண்கள் உறவினர்கள் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டது.

210

மணப்பாறை அருகே விபத்தில் பலியான இளைஞரின் கண்கள் உறவினர்கள் அனுமதியுடன் தானம் செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த எப்.கீழையூரைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவர் உசிலை ஊரணி என்ற இடத்தில் ஏற்பட்ட விபத்தின் போது பலத்த காயமடைந்தார். பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதனை அறிந்த வேணுகோபாலின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வேணுகோபாலின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தனர். ஆனால், இதயதுடிப்பு நின்ற நிலையில், கண்களை மட்டுமே தானமாக வழங்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கு உறவினர்கள் ஒப்புக் கொண்டதை அடுத்து,
வேணுகோபாலின் கண்கள், திருச்சியில் உள்ள கண் மருத்துவமனைக்கு தானமான வழங்கப்பட்டது. மிகப்பெரிய நகரங்களில் மட்டுமே இது போன்ற உடல் உறுப்பு தான மற்றும் கண் தானங்கள் நடைபெற்று வந்த நிலையில், மணப்பாறை போன்ற சிறிய ஊரில் உள்ள மருத்துவமனையின் கண் தானம் நடைபெறுவது இதுவே முதன் முறையாகும்.