மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால தடையை மதுரைக்கிளை மறுப்பு ..!

715

மணல் குவாரிகளை மூடுவதற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் இடைக்கால தடைவிதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட வேண்டும் என தனி நீதிபதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து குமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் இவ்வழக்கை டிசம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.