சி.பி.ஐ அமைப்பை பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது – முதலமைச்சர் மம்தா பானர்ஜி

67

சி.பி.ஐ அமைப்பை மத்திய பா.ஜ.க. அரசு தவறாக பயன்படுத்துகிறது என மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

சிபிஐயின் இயக்குனர்களாக இருந்த அலோக் வர்மாவுக்கும், ராகேஷ் அஸ்தானவுக்கும் இடையே லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக மோதல் வெடித்தது. இதை தொடர்ந்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. அலோக்வர்மாவை மீண்டும் பணியில் அமர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அலோக் வர்மா தீயணைப்புத்துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே, மத்திய அரசு வழங்கிய தீயணைப்புத்துறை இயக்குநர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

இதுதொடர்பாக, மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசு சிபிஐ மற்றும் ரிசர்வ் வங்கி உள்ளிட்ட அமைப்புகளை சீர்குலைத்து வருகின்ற என தெரிவித்தார். மேலும், அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ அமைப்பை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி வருகிறது என்று மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.