மாநிலத்தை உலுக்கிய மம்தா பானர்ஜி தலைமையிலான பேரணி..!

280

மேற்கு வங்க மாநிலத்தில் முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் பல லட்சம் பேருடன் பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தில் 9 மக்களவை தொகுதிகளுக்கு இறுதிகட்டமாக வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில், அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில், பல லட்சம் தொண்டர்கள் புடைசூழ, மம்தா பானர்ஜி, கொல்கத்தா நகரின் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பேரணியில் தொண்டர்கள் நடுவே, மம்தா பானர்ஜி, இருபுறமும் பார்த்துக்கொண்டிருந்த பொதுமக்களைப் பார்த்து கையசைத்தபடி, அவர்களுக்கு கும்பிடு போட்டவாறு நடந்து சென்று வாக்குகளை சேகரித்தார். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற, மம்தாவின் இந்த பிரம்மாண்ட பேரணியை முன்னிட்டு, கொல்கத்தா நகரில் இன்று பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது, பேரணியில் ஏராளமான போலீஸாரும் பங்கேற்று பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.