மம்தா பானர்ஜி பிரச்சாத்துக்கு தடை விதிக்க வலியுறுத்தல்

179

கொல்கத்தாவில் பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா பேரணியில் வன்முறை கலவரத்தைத் தொடர்ந்து, மம்தா பானர்ஜி பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், நேற்று பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா பேரணியில் பாஜக மற்றுமு் திரிணாமுல் தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டு கலவரமாக உருவெடுத்தது. இதில் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதுடன், தலைசிறந்த சீர்திருத்தவாதியும், கல்வியாளருமான வித்யா சாகர் சிலை அடித்து உடைக்கப்பட்டது. இதனால் கொல்கத்தா நகரம் போர்க்களம் போல காட்சியளித்தது.இதனையடுத்து, டெல்லியில் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீத்தாராமன், முக்தர் அப்பாஸ் நக்வி, ஜிநே்திர பிரசாத் தலைமையிலான குழுவினர் நேற்று இரவு தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து மேற்குவங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக, மத்திய அமைச்சர்கள் அளித்த புகாரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையை தூண்டி அமித்ஷா பேரணியை சீர்குலைக்க முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமித்ஷா, கொல்கத்தா கலவரத்துக்கு மம்தா கட்சியினரே காரணம் என ஆதாரங்களை காட்டி குற்றஞ்சாட்டினார். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட்டு, மேற்கு வங்க அரசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.