Mamata Banerjee
Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee interacts with the media regarding demonetisation move at Nabanna (State Secretariat) near Kolkata on Wednesday. PTI Photo (PTI11_8_2017_000202B)

பா.ஜ.க. ஒரு பயங்கரவாத அமைப்பு என்று மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், மதச்சார்புடைய பாரதிய ஜனதா கட்சி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் ஆகியோரை விரும்புவதில்லை என கூறினார். வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க. மோசடி செய்வதாக குற்றஞ்சாட்டிய மம்தா பானர்ஜி, கட்சி நிர்வாகிகள் விழிப்புடன் செயல்பட்டு அவர்களை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தினார். நாட்டு மக்கள் நம்மை கவனித்துக்கொண்டிருப்பதை திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.