ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது எதார்த்தத்தை மீறியது – மம்தா பானர்ஜி

215

நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது, எதார்த்தத்தை மீறியது என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக பாஜக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல்கட்சிகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசுக்கு ஒருவேளை மெஜாரிட்டி கிடைக்காமல், கவிழும் ஒவ்வொரு முறையும், மீண்டும் மீண்டும், நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியமா என மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் பாஜகவின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வரும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது, கோட்பாடுகளுக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம் எனவும், எதார்த்தத்தில், நடைமுறை சாத்தியமற்றது என்றும் நிதிஷ் குமார் விமர்சித்துள்ளார்.