கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரில் தீவிரவாதம் 260% அதிகரிப்பு | மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

186

ஊழலில் திளைத்து வரும் பாஜக அரசு, நாட்டின் செல்வங்களையும், வளங்களையும் கொள்ளையடித்து வருகிறது என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டினார்.

மக்களவைத் தேர்தலையொட்டி மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம் மாநில முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சியின் கீழ், நாட்டு மக்கள் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். பிரதமர் மோடி எடுத்த தவறான முடிவுகளால் பல லட்சக்கணக்கான குடும்பங்கள் மீளாத் துயரத்தில் முடங்கியுள்ளனர் என தெரிவித்தார். பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தீவிரவாதம் ஒழியும் என மோடி தெரிவித்தார்.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் காஷ்மீரில் தீவிரவாதம் 260 சதவீதம் அதிகரித்துள்ளது என குற்றம்சாட்டினார். நாட்டு மக்கள் குறித்து சிறிதும் கவலை இல்லாமல், தொடர்ந்து ஊழலையும், அராஜகத்தையும் நிகழ்த்தி வரும் மோடி அரசுக்கு வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் கட்டாயம் பாடம் புகட்ட வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.