பாஜகவின் குதிரைபேர அரசியலுக்கு மம்தா கண்டனம்..!

107

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியைக் கலைப்பது தான் மத்திய அரசின் வேலையா? என மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகா, கோவாவில் பாஜக மேற்கொண்டு வரும் குதிரை பேர அரசியலுக்கு கண்டனம் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றிவிட வேண்டும் என பாஜக நினைப்பதாகக் கூறிய மம்தா பானர்ஜி, எதற்காக பாஜக இந்த அளவுக்கு பேராசை கொண்டு அலைகிறது என புரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகா, கோவாவில் வேலை முடிந்தததும் பாஜக, தனது கவனத்தை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானை நோக்கித் திருப்பும் என்று கூறிய அவர், பாஜக ஆளாத மாநிலங்களில் ஆட்சியைக் கலைப்பது தான் மத்திய அரசின் வேலையா? என கேள்வி எழுப்பியுள்ளார்.