மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு, இனி நிதியுதவி அளிக்காது | மேற்கு வங்க அரசு தகவல்

80

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கு, இனி நிதியுதவி அளிக்காது என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 10 கோடி ஏழை மக்கள் பயனடையும் வகையில், 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு, மாநில அரசுகள் 40 சதவீதம் நிதி உதவி அளிக்கின்றன. இந்நிலையில், இந்த திட்டத்திற்கு இனி நிதியுதவி அளிக்காது என மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திட்டம் தொடர்பான அனைத்து விளம்பரம் மற்றும் தகவல் தொடர்பிலும், பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளதால் இந்த நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.