மோடியைக் கண்டித்து மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம்..!

103

பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்து மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி தொடர்பாக கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமாரை விசாரணைக்கு வருமாறு சி.பி.ஐ. அழைத்தது. சி.பி.ஐ.யின் நடவடிக்கையால் கடும் கோபம் அடைந்த மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் மெட்ரோ ரெயில் நிலையம் எதிரே 3 நாட்கள் தர்ணா போராட்டம் நடத்தினார். ஆனால், சி.பி.ஐ. விசாரணைக்கு ராஜீவ்குமார் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மம்தா பானர்ஜி தனது தர்ணா போராட்டத்தை கை விட்டார்.

இந்த நிலையில், டெல்லியில் மம்தா பானர்ஜி மீண்டும் இன்று தர்ணா போராட்டத்தை தொடங்குகிறார். இந்தியாவில் பல்வேறு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பாஜக அரசைக் கண்டித்து, இந்த தர்ணா போராட்டம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் 2 நாட்கள் தர்ணா போராட்டம் மேற்கொள்ள மம்தா பானர்ஜி முடிவு செய்துள்ளார். இதற்கான ஏற்பாடுகளை டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் செய்து வருகின்றனர்.