இந்து மதத்தில் தாலிபானிய சூழலை உருவாக்க பா.ஜ.க முயற்சி – மம்தா பானர்ஜி

339

இந்து மதத்தில் தாலிபானிய சூழலை உருவாக்க பா.ஜ.க முயற்சிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்…

கொல்கத்தாவில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர், மத்தியிலிருந்து பா.ஜ.கவை கூட்டாட்சி முன்னணி அகற்றும் என்றார். தற்போதைய பா.ஜ.க ஆட்சியாளர்களின் கைகளில் இரத்தக்கறை படிந்திருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, தினந்தோறும் மக்கள் செத்துக்கொண்டிருப்பதாக ஆவேசத்துடன் தெரிவித்தார். தாலிபானிய இந்து மதவாதத்தின் அடிப்படை தங்களுக்கு புரியவில்லை என்றும், விவேகானந்தர் போதித்த இந்து மத கொள்கைகளின் மீது தாங்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் மதவாத பயங்கரவாதத்தை பா.ஜ.க ஏவி விட்டிருப்பதாக மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.