காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

288

காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்யவேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காவிரி விவகாரத்தில் தண்ணீர் திறப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் அனைத்து அம்சங்களையும் ஆராயவில்லை என்றார். கர்நாடகாவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறிய அவர், காவிரி விவகாரம் தொடர்பாக வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்யவேண்டும் என்று தெரிவித்தார். கர்நாடக அரசு வழக்கறிஞர்கள் இது தொடர்பாக சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.