மல்லையாவின் ரூ.9,600 கோடி சொத்துக்கள் தற்காலிகமாக முடக்கம்!

384

விஜய் மல்லையாவின் 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகளில், 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் லண்டனில் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ள நிலையில், மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்தி வர, தீவிர முயற்சி நடைபெற்று வருகிறது. இது தொடர்பான விசாரணை, பிரிட்டன் நீதிமன்றத்திலும் நடக்கிறது. இந்த வழக்கில், உலகம் முழுவதும் மல்லையாவுக்கு சொந்தமான, 9 ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை முடக்கும் ஆவணங்கள், பிரிட்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. அதன் அடிப்படையில், மல்லையாவின் சொத்துகளை தற்காலிகமாக முடக்க, பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.