மளிகை கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 சிறுவர்களை, சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்து, நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

239

மளிகை கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 சிறுவர்களை, சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கைது செய்து, நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மதுரை சாலையில் சேகர் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இரவில் கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது இரண்டு சிறுவர்கள் கடைக்குள் திருடச்செல்வதை, சி.சி.டி.வி. கேமிராவில் பார்த்த அவர், மணப்பாறை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு நின்றுக்கொண்டிருந்த சிறுவனை கைது செய்தனர். அவனிடம் விசாரணை மேற்கொண்டதில், மேலும் ஒரு சிறுவனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், ரமேஷ், நவாஸ் ஷெரீப் ஆகிய இரண்டு பேர் மளிகை கடையில் திருட முயன்றது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்த, போலீசார் இருவரையும் மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.