நிதி மோசடிக்கு ரசாக்கே முழு பொறுப்பு – பிரதமர் மஹாதீர்

404

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது அரசு நிதி நிறுவனத்தில் ஊழல் செய்த விவகாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக தற்போதைய பிரதமர் மஹாதீர் முகமது தெரிவித்துள்ளார். மலேசிய பிரதமராக இருந்த நஜிப் ரசாக், பதவியை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து புதிதாக அமைந்த மஹாதீர் தலைமையிலான அரசு, இதுகுறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைத்தது. இந்நிலையில் புட்ராஜெயாவில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மஹாதீர், ரசாக் மீதான ஊழல் குறித்து விசாரணை அதிகாரிகள் அனைத்து ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர். இதற்கே அவரே முழு பொறுப்பை ஏற்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.