மலையாள நடிகை திவ்யா உன்னி விவாகரத்து பெற்ற நிலையில் மீண்டும் திருமணம்..!

960

முதல் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற மலையாள நடிகை திவ்யா உன்னி, அருண் குமார் என்ற என்ஜினியரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. 2002ஆம் ஆண்டு டாக்டர் சுதீர் சேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அர்ஜுன் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் இவர்களுக்கு உள்ளனர். திவ்யா உன்னி அமெரிக்காவில் நடனப் பள்ளி நடத்தியது சுதீருக்கு பிடிக்கவில்லை என்பதால், இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விவாகரத்து பெற்றனர். இந்தநிலையில், டெக்சாஸில் பணியாற்றும் அருண் குமார் என்ற என்ஜினியருக்கும், திவ்யா உன்னிக்கும், ஹூஸ்டனில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.