தங்களின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் என்று மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது..!

464

தங்களின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டாம் என்று மாலத்தீவு அரசு தெரிவித்துள்ளது.மாலத்தீவின் மிக நெருங்கிய நட்பு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனிடையே அரசியல் குழப்பத்தால் அசாதாரண சூழல் நிலவும் அந்நாட்டில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்று இந்தியா கருத்து கூறியது. மேலும் அவசர நிலையை 30 நாட்கள் நீட்டிப்பு செய்ததற்கும் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியாவின் கருத்து தங்கள் நாட்டு அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களுக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளது. நாட்டில் குழப்பம் நிலவுவதை ஒப்புக்கொண்டுள்ள மாலத்தீவு அரசு, பிறநாடுகள் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதால் குழப்பத்திற்கு தீர்வுக்காண்பதில் சிக்கல் தொடரும் அபாயம் இருப்பதாக தெரிவித்துள்ளது.