கன்னியாகுமரி அருகே வலையில் சிக்கிய 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

313

கன்னியாகுமரி அருகே வலையில் சிக்கிய 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைக்குளம் அண்ணாநகரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது வீட்டின் பின்புறம் உள்ள குளத்தில் இருந்து அவ்வப்போது பாம்புகள், மற்றும் விஷ பூச்சிக்கள் அவரது வீட்டிற்குள் சென்றுவிடுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனைத் தடுப்பதற்காக வீட்டைச் சுற்றிலும் வலை வேலியை அவர் அமைத்திருந்தார். இந்த நிலையில் அவர் அமைத்திருந்த வேலியில் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிக்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்தப் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.