திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதனை மாலை முரசு இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கி வைத்தார்

7433

திருச்செந்தூர் மாசித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதனை மாலை முரசு இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தமிழ் கடவுளாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில், ஆண்டுதோறும் மாசித் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சுப்பிரமணிய சுவாமி கோவில் திருவிழா கடந்த ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில், சுவாமியும், அம்பாளும் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். முதலில் வினாயகர் தேர் புறப்பட்டு நான்கு ரத வீதிகளையும் சுற்றி, நிலையை அடைந்தது. அதன் பின்னர் பெரிய தேரை மாலை முரசு இயக்குனர்கள் இரா.கண்ணன் ஆதித்தன், இரா.கதிரேச ஆதித்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.