வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

270

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இன்னும் ஒரு சில தினங்களில் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து,
தெற்கு, மேற்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், பிற பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.