கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதைவிட மக்கள் அங்கீகரிக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்...

புதுக்கோட்டையில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், கோகுல இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவிரிக்காக தனது பதவியை ராஜினாமா செய்தவர் ஜெயலலிதா என்று புகழாரம் சூட்டினார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை தேர்தல் ஆணையம் வேண்டுமானால் அங்கீகரிக்கலாம் என்று கூறிய அவர், அதைவிட மக்கள் அங்கீகரிப்பது தான் முக்கியம் என தெரிவித்துள்ளார்..