ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை இயல்பு நிலை திரும்பாது – மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ

132

ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக மூடும் வரை தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பாது என்பதில் மக்கள் உறுதியாக இருப்பதாக மக்கள் அதிகாரம் அமைப்பு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை கண்டித்து, சென்னையில் கைது செய்யப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினரை தொடர்ந்து 8 நாட்கள் நீதிமன்றத்தில் நேரடியாக கையெழுத்திட உத்தரவிட்டு, நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆஜராகினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ, ஸ்டெர்லைட் ஆலைகளுக்கு தண்ணீர் துண்டிப்பு ,மின்சாரம் துண்டிப்பு மற்றும் துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அங்கு சென்று சொல்லும் வாக்குறுதிகள் என்பதெல்லாம் கண் துடைப்பு என்று கூறினார். போலீசார் தரப்பில் வெளியிடப்படும் சிசிடிவி காட்சிகள் அனைத்தும் ஒருதலை பட்சமானது என்று கூறிய அவர், இது ஜனநாயக உரிமையை குலைக்கும் நடவடிக்கை என்றும் சாடினார்.