மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

156

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிர் மேம்பாட்டுக்காக கொண்டு வரப்பட்ட மசோதாவை நிறைவேற்றிட போராட வேண்டி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார். பெண்களுக்கு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி கோரி தொடர்ச்சியாக பணியாற்றுவதில் திமுக முன்னணி வகிப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டின் வரலாறு 1996ம் ஆண்டு தொடங்கினாலும், 20 ஆண்டுகால முயற்சிகளுக்கு பின்னும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறவில்லை என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார்
அரசியலில் பெண்களின் முன்னேற்றத்திற்கு இன்றிமையாத சமூகநீதி மற்றும் பாலின சமத்துவத்தின் பயன்களில் சம வாய்ப்புகளை வழங்க இட ஒதுக்கீடு மசோதா வழிவகை செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
நாட்டின் மதிப்புக்குரிய அரசியல் பதவிகளில் பெண்கள் பங்கேற்க வழிவகை செய்யும், மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற பிரதமர் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.