மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டம் | மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேச்சு

276

நாட்டில் பெருகிவரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு சுதந்திரம் அடைந்தபோது 90 சதவீதமாக இருந்த இந்துக்களின் மக்கள் தொகை 72 சதவீதமாக சரிந்து விட்டதாக கூறினார். சிறுபான்மையினரை மறுவரையறை செய்யவேண்டும் என்று கூறிய கிரிராஜ் சிங், மக்கள் நலனை பாதுகாக்க நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் யோகாவை கட்டாய பாடமாக்கவேண்டும் என்று அவர் கூறினார். நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டும் என்றால் மக்கள் தொகையை கட்டுப்படுத்த புதிய சட்டம் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அப்படி தவறினால் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படும் என்றும் அவர் எச்சரித்தார். மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.