காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா வலியுறுத்தியுள்ளார்.

217

காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நடிகை நக்மா வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மகிளா காங்கிரஸ் அணியின் தேசிய பொதுச்செயலாளர் நடிகை நக்மா சென்னை சத்யமூர்த்தி பவனில் உள்ளாட்சி தேர்தல்கள் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரசில் அனுபவமுள்ள பல தலைவர்கள் இருப்பதால், புதிய மாநில தலைவரை தேர்வு செய்வது தாமதமாவதாக கூறினார். எனினும் விரைவில் புதிய மாநில தலைவரை தேர்வு செய்து கட்சி மேலிடம் அறிவிக்கும் என்றும் நடிகை நக்மா தெரிவித்தார். சென்னையில் வெள்ளம் வந்தபோது, கா்நாடக மக்கள் உதவியதை சுட்டிக்காட்டிய நக்மா, அதேபோல, காவிரி விவகாரத்திலும் கர்நாடகா உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் இது ஒரு உணர்வுபூர்வமான விஷயம் என்பதால், பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் நக்மா வலியுறுத்தினார்.