வடமாநிலங்களில் கொண்டாடப்படும் மகர சங்கராந்தியை முன்னிட்டு கங்கையில் புனித நீராட பல லட்சம் மக்கள் நதிக்கரையில் திரண்டனர்.
தென் மாநிலங்களில் பொங்கல் பண்டிகை வெகுசிறப்பாக கொண்டாடப்படுவது போல வட மாநிலங்களில் மகரசங்கராந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அங்குள்ள மக்கள் கங்கையில் புனித நீராடுவது வழக்கம். இந்நிலையில் மேற்குவங்காளத்தில் உள்ள கங்கா சாகர் பகுதியில் கங்கை, கடலுடன் சங்கமிக்கும் இடத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். இந்த புனிதா நீராடலுக்கு இந்தியா மட்டுமின்றி நேபாளம், பூட்டான், வங்காளம் ஆகிய நாடுகளில் இருந்தும் பக்தர்கள் அங்கு வந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, அங்குள்ள கபில முனி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டனர்.