பள்ளிகளுக்கு விடுமுறை, மின்சாரம் துண்டிப்பு..!

237

மகாராஷ்ராவில் பெய்து வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மும்பை, வர்தா, நாக்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நாக்பூரில் இரு தினங்களாக கொட்டி தீர்த்த மழையால் நகரமே தண்ணீரில் மிதக்கிறது. பள்ளிக்கூடம் ஒன்றை மழைநீர் சூழ்ந்ததால், குழந்தைகள் வெளியே வர முடியாமல் தவித்தனர். மீட்பு படையினர் அவர்களை பைபர் படகுகள் கொண்டும், கயிறு கட்டியும் மீட்டனர். நாக்பூரில் உள்ள கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், குடியிருப்புகள் மற்றும் ரயில் நிலையத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது.

இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.