மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரே வாரத்தில் 28 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

194

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஒரே வாரத்தில் 28 விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மரத்வாடா பகுதியில் வறட்சி காரணமாக கடந்த 7 நாளில் மட்டும் 28 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்
ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் மரத்வாடாவில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 732 ஆக உயர்ந்துள்ளது.அதிகபட்சமாக பீட் மாவட்டத்தில் 156 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளில் 440 பேர் மட்டுமே நிவாரண உதவி பெற தகுதியுடையவர்கள் என்று மண்டல ஆணைய அலுவலகம் தெரிவித்துள்ளது. நீண்டகால வறட்சியினால் மனம் உடைந்து காணப்படும் விவசாயிகள் அறுவடை குறித்தும் கவலைக் கொண்டு உள்ளனர். வறட்சி காரணமாக 2014-ல் 551 விவசாயிகளும், 2015-ம் ஆண்டில் ஆயிரத்து 133 விவசாயிகளும் தற்கொலை செய்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.