கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கக்கோரி 91 விவசாயிகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம்..!

491

கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கக்கோரி மகாராஷ்டிராவை சேர்ந்த 91 விவசாயிகள் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடன் சுமை, வறட்சியின் காரணமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, விவசாயக் கடனை ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அம்மாநில விவசாயிகள் மாபெரும் போராட்டம் நடத்தினர். உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்த போராட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து அனைவரையும் சிந்திக்க வைத்தது. இந்தநிலையில், கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கக்கோரி மகாராஷ்டிராவை சேர்ந்த 91 விவசாயிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அம்மாநில ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.