வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, 161 நாடுகளுக்கு ஈ-டூரிஸ்டு விசா சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

269

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, 161 நாடுகளுக்கு ஈ-டூரிஸ்டு விசா சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய சுற்றுலாத் தளங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளின் வருகை, அரசுக்கு அதிக லாபத்தை ஈட்டித்தருகிறது. இதனை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2014 ஆம் ஆண்டு இணைய சேவை மூலமாக சுற்றுலா விசா வழங்க, மத்திய அரசு சட்டம் நிறைவேற்றியது. தற்போது இந்த ஈ-டூரிஸ்டு விசா சேவையை 161 நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அரசுக்கு சுற்றூலா மூலமாகக் கிடைக்கும் வருவாய் 168 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.