சபரிமலை அய்ப்பன் கோவிலில் இன்று மகர ஜோதி தரிசனம்..!

531

சபரி மலை அய்யப்பன் கோவிலில் இன்று நடைபெறும் மகர ஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
இன்று மாலை 6.45 மணியளவில் மகர நட்சத்திரம் 3 முறை விண்ணில் பிரகாசமாக வந்து மறையும். இதனை மகரஜோதி விழாவாக கொண்டாடுகிறோம். இதனையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திரு ஆபரணங்கள் பந்தளத்தில் இருந்து ஊர்வலமாக கோவில் சன்னிதானத்துக்கு எடுத்துவரப்படும். இதன் பின் மாலை 6.25 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை மற்றும் பூஜை நடைபெறும். சில நிமிடங்களில், பொன்னம்பலமேட்டில், மகர நட்சத்திரம் காட்சி தரும். இதனைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர். மகர விளக்கு பூஜையையொட்டி கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.