பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலம் 26 வாரங்களாக அதிகரிப்பு !

308

அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறுக்கான விடுமுறை காலம் 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் கடந்த மாதம் கொண்டு வரப்பட்ட மகப்பேறு ஆதாய மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம் 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதான 12 வாரங்களாக இருந்து வந்த மகப்பேறுக்கான விடுப்புக்காலம் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து, 18 லட்சம் பெண்கள் பலன் அடைவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முதல் 2 குழந்தை பேறுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், 3வது குழந்தைக்கு 12 வாரங்கள் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.